ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பாவை தனியன்கள் பராசர பட்டர் அருளியது நீளாதுங்க ஸ்தநகரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபவந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதாதசஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய உய்யக்கொண்டார் அருளியது நேரிசை வெண்பா அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு. ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை Rendering by Nithyasree Mahadevan 474: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 475: வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 476: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் 477: ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 478: மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 479: புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 480: கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் 481: கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய் 482: தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய் 483: நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் ப
|